தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி.. ஜாக்பாட் கொட்டும் ராசிகள் நீங்கள்தான்

கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி.. ஜாக்பாட் கொட்டும் ராசிகள் நீங்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 11, 2024 03:13 PM IST

Jackpot: ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். நட்சத்திர இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும் வருகின்றமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி
கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். நட்சத்திர இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும் வருகின்றமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றத்தால் ராஜயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமான முதலீடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க கூடும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நீண்ட காலமாக மனக்கவலைகள் முடிவுக்கு வரும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் அற்புதமான பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பல நாள் ஆசை நிறைவேறும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். புத்திசாலித்தனத்தால் பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்தன கசப்புகள் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

WhatsApp channel