மீனத்தில் சூறாவளியாக வரும் புதன்.. பணக்கடலின் மிதக்க போகும் ராசிகள்.. மூட்டை மூட்டையாக தூக்கிச் செல்லப் போகும் ராசி யார்
Lord Mercury: புதனின் நேரடி பயணம் சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தரும். மீன ராசியில் புதன் பகவான் நேரடியாக வருகின்ற காரணத்தினால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற போகின்றார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் கல்வி, நரம்பு, அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
Apr 25, 2025 07:00 AMசனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
Apr 25, 2025 05:00 AMபண மழை கொட்டும் யோகம் யாருக்கு.. அதிர்ஷ்டம் கை வருமா.. இன்று ஏப்.25 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
புதன் பகவான் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மீன ராசியில் நேரடியாக திரும்புகிறார். இது புதன் பகவானின் பலவீனமாக கருதப்படுகிறது. இது சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கடினமான சூழ்நிலையாக அமையும்.
அதே சமயம் புதனின் நேரடி பயணம் சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலன்களை பெற்றுத் தரும். மீன ராசியில் புதன் பகவான் நேரடியாக வருகின்ற காரணத்தினால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
உங்களுக்கு புதன் பகவானால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நீங்கள் எதிர்பார்த்ததை விட பணம் உங்களை தேடி வரும். திறமை மற்றும் திறன்களின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மிதுன ராசி
உங்களுக்கு புதனின் நேரடி பயணம் நல்ல பலன்களை பெற்று தர போகின்றது. பணம் சம்பாதிப்பதற்கான பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதிநிலை மிகவும் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல பலன்களை பெற்று தரும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகும். செலவுகளை கட்டுப்படுத்த கூடிய சூழ்நிலைகள் அமையும். பணத்தை வீணடிக்க கூடிய தருணங்கள் தற்போது முடிந்து விட்டது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
கன்னி ராசி
பொருளாதாரத்தில் உங்களுக்கு புதன் பகவானின் நேரடி பயணம் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அமையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
