தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Will Get Trapped By The Anger Of Lord Saturn

சனி விரட்டி விரட்டி அடிப்பார்.. 10 மாதம் முரட்டு அடி.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 01:57 PM IST

Lord Saturn: இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவானின் உக்கர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசிக்கான ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவானின் உக்கர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சனிபகவானின் கோபப்பார்வையால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்த 10 மாத காலம் உங்களுக்கு சில மோசமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பேசும்பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் காரியத்தை சாதிக்கலாம்.

விருச்சிக ராசி

 

சனிபகவானின் கோபப்பார்வை உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முடிவுகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மகர ராசி

 

ஏழரை சனியின் கடைசி கட்டம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சனிபகவானின் கோபப்பார்வை உங்கள் மீது விழுகின்றது. மன அழுத்தம் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக தொந்தரவு செய்த விஷயங்கள் சரி ஆவதற்கு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசி

 

ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. முதல் வீட்டில் சனி பகவான் பயணம் செய்து கொண்டிருக்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சனி பகவானின் கோப பார்வையால் வீட்டில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 10 மாத காலம் உங்களுக்கு தொந்தரவு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel