தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Will Get The Yoga Given By Guru Bhagavan In Taurus

குரு கொட்டுவதை தடுக்க முடியாது.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 03:08 PM IST

ரிஷப ராசியில் குரு பகவான் தரும் யோகத்தைப் பெறும் ராசிகளை இங்கு காண்போம்

குரு பகவான்
குரு பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு பண வரவில் யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் தனது இடத்தை மாற்றுகிறார்.

ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குரு பகவானால் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவர்களாக மாறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குருபகவான் செல்கின்றார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் செல்கின்றார். இதனால் நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel