தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Will Fully Receive The Blessings Of Lord Sani

சனி கொண்டாடப் போகிறார்.. உதயத்தில் வருகிறது ராஜ வாழ்க்கை.. குபேர யோக அதிர்ஷ்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 05:44 PM IST

Lord Sani: அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்பத்தில் உதயமானார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றார்.

சனி
சனி

ட்ரெண்டிங் செய்திகள்

குறிப்பாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் சிறப்பு ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்பத்தில் உதயமானார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மைகள் ஆக மாறும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சேர்ந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் உதயத்தால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு அந்தஸ்து உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல பலன்கள் உண்டாகும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையாக அமைந்துள்ளது. வீட்டில் திடீரென்று சுப காரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவில் இந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்திலும் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது

சிம்ம ராசி

 

சனிபகவானின் உதயம் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த துன்பங்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel