தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி சுயநல அடி.. நட்சத்திரத்தில் அதிரடி.. பூரட்டாதியில் பணமழை.. 3 ராசிகள் ராஜயோகம்..!

சனி சுயநல அடி.. நட்சத்திரத்தில் அதிரடி.. பூரட்டாதியில் பணமழை.. 3 ராசிகள் ராஜயோகம்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2024 01:02 PM IST

Saturn: சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும்.

மகர ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணம் வரவை அதிகப்படுத்திக் கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

மேஷ ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் உயர்வு உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. குடும்ப உறுப்பினர்களிடம் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel