தலைகீழாக தண்ணி குடிக்க போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்.. தப்பிச்சு ஓடுங்க மக்களே
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலைகீழாக தண்ணி குடிக்க போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்.. தப்பிச்சு ஓடுங்க மக்களே

தலைகீழாக தண்ணி குடிக்க போகும் ராசிகள்.. செவ்வாய் புரட்டி எடுக்கப் போகிறார்.. தப்பிச்சு ஓடுங்க மக்களே

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 04, 2024 12:18 PM IST

செவ்வாய் பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய்
செவ்வாய்

இது போன்ற போட்டோக்கள்

கும்ப ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார் ஏற்கனவே ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். தற்போது அவருடன் செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். 

செவ்வாய் பகவானின் இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் அந்தமான சூழ்நிலையில் இருக்கும் நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்க நினைத்தால் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கும் போது நன்கு யோசித்த பிறகு செய்ய வேண்டும். மனரீதியாக உங்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக உருவாக்கும். வசதி வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். கடின உழைப்பும் உங்களுக்கு பெரிய பலன்கள் தராது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் பல நஷ்டங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9