Lord Shani 2025: சனி 2025 வரை பணமழை கொட்டுவார்.. அதிர்ஷ்டத்தில் விளையாடும் ராசிகள்.. நீங்க என்ன ராசி
Lord Shani Rajayoga: இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 19, 2025 06:01 PMகேது பெயர்ச்சி: பணக்கார இடத்தை பிடிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. கடின உழைப்பு தேவை.. கவலைப்படாத ராசிகள்
Mar 19, 2025 05:53 PMருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
Mar 19, 2025 01:34 PMஒரே நாளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம்.. இந்த 3 ராசிக்கு பாதிப்பு.. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!
Mar 19, 2025 11:37 AMஅதிர்ஷ்ட ராசிகள் : நான்கு கிரகங்களின் சேர்க்கை.. மூன்று ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது.. அந்தஸ்து, கௌரவம் உயரும்!
Mar 19, 2025 10:04 AMபிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?
Mar 19, 2025 09:25 AMகேது பெயர்ச்சி 2025 : சிம்ம ராசியில் பிரவேசிக்கும் கேது.. எந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் .. பண மழை நனையும் யோகம் உங்களுக்கா
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையை முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 2025 வரை அதிர்ஷ்டம் உங்களுக்கு சனி பகவானால் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதுவும் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். 2025 வரை நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
எடுத்துக்கொண்ட இலக்குகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
