Rahu: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு ஆபத்து உறுதி..தப்பிக்க முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு ஆபத்து உறுதி..தப்பிக்க முடியாது

Rahu: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு ஆபத்து உறுதி..தப்பிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 02, 2024 12:32 PM IST

ராகு பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிகளை இங்கே காண்போம்.

ராகு
ராகு

சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக திகழ்ந்து வருகின்றார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கிறார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவானின் மீன ராசியின் பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சில சிரமங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

ராகு பகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சில தாக்கங்களை கொடுக்க போகின்றார். உங்களுடைய ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தனுசு ராசி

 

ராகு பகவானால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வசதிகள் சற்று குறைவாக இருக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனி அக்கறை செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருப்பது தவிர்ப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பல்வேறு விதமான சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசி

 

ராகு பகவானால் உங்களுக்கு இந்த ஆண்டு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பல்வேறு விதமான பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவுகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner