தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Dharitra Rasis: தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. செவ்வாய் கஷ்டம் வருகுது.. கஷ்டத்தில் கதறும் ராசிகள் நீங்க தான்!

Dharitra Rasis: தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. செவ்வாய் கஷ்டம் வருகுது.. கஷ்டத்தில் கதறும் ராசிகள் நீங்க தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2024 09:48 AM IST

Dharitra Rasis: சொந்த மேஷ ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் மகா தரித்திர யோகம் உருவாக்க உள்ளது. இது மிகப்பெரிய அசுப யோகங்களில் ஒன்றாகும். இந்த தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. செவ்வாய் கஷ்டம் வருகுது.. கஷ்டத்தில் கதறும் ராசிகள் நீங்க தான்!
தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. செவ்வாய் கஷ்டம் வருகுது.. கஷ்டத்தில் கதறும் ராசிகள் நீங்க தான்!

தனது சொந்த மேஷ ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் மகா தரித்திர யோகம் உருவாக்க உள்ளது. இது மிகப்பெரிய அசுப யோகங்களில் ஒன்றாகும். இந்த தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் வரப்போகின்றது. செய்யும் வேலையில் நீங்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் குறித்துக் கொள்வது நல்லது. 

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு முன்னேற்றத்தில் தர சற்று தாமதம் ஆகும்.

மிதுன ராசி

இந்த தரித்திர யோகம் உங்களுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்க கூடிய சூழ்நிலைகளை உண்டாக்கும். சிறிய வேலைக்கு கூட நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் தற்போது செய்யாமல் இருப்பது நல்லது. 

வேலைகளில் இருந்து உங்களுடைய கவனம் திசை திரும்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. உங்களுடைய காலம் மிகவும் போராட்டமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கடக ராசி

தரித்திர யோகம் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்காது. எடுத்த வேலையை முடிப்பதற்கு மிகவும் தாமதமாகும். எந்த வேலையை எடுத்தாலும் உங்களுக்கு அசௌகரியமான சூழ்நிலைகள் ஏற்படும். 

பெரிய அளவில் நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களிடம் மனக்கசப்புகள் ஏற்படும். வாழ்க்கை துணையோடு சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel