தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புதன் வேட்டையை தொடங்கி விட்டார்.. யாருக்கு யோகம் எடுக்கப் போவது.. ஜாக்பாட் வந்து கொண்டிருக்கிறது

புதன் வேட்டையை தொடங்கி விட்டார்.. யாருக்கு யோகம் எடுக்கப் போவது.. ஜாக்பாட் வந்து கொண்டிருக்கிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 11, 2024 04:02 PM IST

Lord Mercury: புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

புதன் பகவான்
புதன் பகவான்

நவகிரகங்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி இடமாற்றம் மட்டுமல்லாது வக்கிர பெயர்ச்சி, வக்கிர நிவர்த்தி, அஸ்தமனம், உதயம் என அனைத்து செயல்பாடுகளும் அனைத்து மாற்றங்களையும் 12 ராசிகளுக்கும் கொடுக்கும்.

புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

புதன் பகவானின் செயல்பாடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

சிம்ம ராசி

 

புதன் பகவானின் தாக்கம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. திடீர் பணவரவு உங்களை தேடி வரும். திருமணத்தில் நல்ல மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். உணர்ச்சிவசத்தில் எந்த முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமை முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு லாபகரமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வு எழுதுபவர்களுக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel