Guru Peyarchi: குரு கொண்டாட்டம் தொடக்கம்..ராஜாவாகப் போகும் ராசிகள்-here we will find the rasis that receive the auspicious yogas of guru bhagavan - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi: குரு கொண்டாட்டம் தொடக்கம்..ராஜாவாகப் போகும் ராசிகள்

Guru Peyarchi: குரு கொண்டாட்டம் தொடக்கம்..ராஜாவாகப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 21, 2024 12:39 PM IST

Guru Bhagavan: குரு பகவானின் சுப யோகங்களை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

நவகிரகங்கள் எப்போதும் ஒரு கால சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது குரு பகவான் 12 ராசிகளின் முதல் ராசியான மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். வரும் ஏப்ரல் மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

குரு பகவானின் நேரான பயணம் தொடங்கி உள்ள காரணத்தினால் இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட பூர்வ மூன்று ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அந்த வகையில் மே மாதம் வரை சுப பலன்களை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக நடக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்ம ராசி

 

குருபகவானின் நேரான பயணம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும். நீண்ட நாள் போராட்டங்கள் சுபமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். உங்களுடைய தைரியத்தால் பல்வேறு விதமான காரியங்கள் வெற்றி அடையும்.

மேஷ ராசி

 

குருபகவான் நேரான பயணம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு தடை இல்லாமல் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலட்சிய செயல்பாடு உங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய தருணங்கள் இப்போது அமையும். இதுவரை திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பெற்றோர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9