பணம் மூட்டையை கொட்டும் ராகு.. நட்சத்திரத்தில் 3 ராசிகளுக்கு யோகம் வருது.. உங்க ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணம் மூட்டையை கொட்டும் ராகு.. நட்சத்திரத்தில் 3 ராசிகளுக்கு யோகம் வருது.. உங்க ராசி இருக்கா?

பணம் மூட்டையை கொட்டும் ராகு.. நட்சத்திரத்தில் 3 ராசிகளுக்கு யோகம் வருது.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 18, 2024 04:38 PM IST

Lord Rahu: நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறியுள்ளார். வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு மாற உள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்.

பணம் மூட்டையை கொட்டும் ராகு.. நட்சத்திரத்தில் 3 ராசிகளுக்கு யோகம் வருது.. உங்க ராசி இருக்கா?
பணம் மூட்டையை கொட்டும் ராகு.. நட்சத்திரத்தில் 3 ராசிகளுக்கு யோகம் வருது.. உங்க ராசி இருக்கா?

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்ற காரணத்தினால் இவர்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு மற்றும் கேது இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகுபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறியுள்ளார். வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு மாற உள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு பகவான் உங்கள் ராசியின் விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். செல்வத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். உங்களுடைய செயல்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணம் செய்யும். எடுத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கும் இடையில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

ராகு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். எதிர்பாராத நேரத்தில் பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சுத் திறமையால் உங்களுக்கு எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

 

ராகு பகவானின் பல்வேறு விதமான பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கக்கூடும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வெற்றியைத் தேடித் தரும். எதிர்காலம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner