தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு தலை மீது விழுகிறார்.. ரத்தக்கண்ணீர் விடும் ராசிகள்.. புரட்டு எடுப்பது உறுதி.. நீங்க என்ன ராசி!

குரு தலை மீது விழுகிறார்.. ரத்தக்கண்ணீர் விடும் ராசிகள்.. புரட்டு எடுப்பது உறுதி.. நீங்க என்ன ராசி!

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2024 01:55 PM IST

Lord Guru: கிரகங்களின் அஸ்தமனத்தால் பல்வேறு விதமான நன்மைகள் அனைத்து ராசிகளுக்கும் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகியுள்ள குரு பகவானால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

குரு தலை மீது விழுகிறார்.. ரத்தக்கண்ணீர் விடும் ராசிகள்.. புரட்டு எடுப்பது உறுதி.. நீங்க என்ன ராசி
குரு தலை மீது விழுகிறார்.. ரத்தக்கண்ணீர் விடும் ராசிகள்.. புரட்டு எடுப்பது உறுதி.. நீங்க என்ன ராசி

இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களை மாற்றமாக குருபகவானின் இடமாற்றம் நடைபெற்றது. மே மாதம் ஒன்றாம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறினார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆனார்.

கிரகங்களின் அஸ்தமனத்தால் பல்வேறு விதமான நன்மைகள் அனைத்து ராசிகளுக்கும் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகியுள்ள குரு பகவானால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் சிக்கல்கள் அதிகரிக்கலாம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது. வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலைகளில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முடிவுகள் எடுப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வது நல்லது. மிகவும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மிக நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகும். செலவுகள் அதிகரிக்க கூடும். கடன் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மீன ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வேலையையும் தள்ளிப் போடாமல் விரைவில் செய்து முடிப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முதலில் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவுகளை எடுத்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பண சிக்கல்களில் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் சொல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel