Lord Surya: சூரியனின் யோக பலன்கள் இந்த ராசிகளுக்கு தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: சூரியனின் யோக பலன்கள் இந்த ராசிகளுக்கு தான்

Lord Surya: சூரியனின் யோக பலன்கள் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jan 24, 2024 02:44 PM IST

Sun transit: சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

இது போன்ற போட்டோக்கள்

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக விளக்கி வருகிறார். இவர் தலைமை பண்பு, தைரியம், அதிகாரம், நம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். இந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜனவரி 15 ஆம் தேதியான பொங்கல் தினத்தன்று மகர ராசிக்குள் நுழைந்தார்.

தை மாதப் பிறப்பின் போது சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்த தினம் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ன கொண்டாடப்படுகின்றது. நமது தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

நவகிரகங்கள் ராசி மாற்றம் மட்டுமல்லாது மற்ற செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் ஜனவரி 24ஆம் தேதி ஆன இன்று திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார்.

சூரிய பகவானின் நட்சத்திரம் மாற்றத்தால் 12 ராசிகளில் மூன்று ராசிக்காரர்கள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் அல்லது உங்களுக்கு சிறப்பு பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்களால் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். இவருடைய நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு மகத்தான பலன்களை தந்துள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. தந்தைக்கு இடையே இருந்த சிக்கல்கள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலைக்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9