தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury Luck: கொட்டும் பண மழையோடு புதன் வருகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்.. உங்க ராசி இருக்கா?

Mercury Luck: கொட்டும் பண மழையோடு புதன் வருகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2024 10:27 AM IST

Mercury Luck: புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ரிஷபத்திற்குச் செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்.

கொட்டும் பண மழையோடு புதன் வருகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்.. உங்க ராசி இருக்கா?
கொட்டும் பண மழையோடு புதன் வருகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்.. உங்க ராசி இருக்கா?

புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ரிஷபத்திற்குச் செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சாற்றலால் வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக உண்டாகும். பல காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக உள்ளது சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றது. இதனால் உங்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel