தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Have Gained Yoga Due To Guru Bhagavan Entering Taurus

வந்துவிட்டார் குரு.. பணமழை வருகிறது.. 3 ராசிகளுக்கு உச்சம்.. மே மாதம் முதல் ராஜ வாழ்க்கை ஆரம்பம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 21, 2024 02:42 PM IST

Guru Bhagavan: குருபகவான் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குருபகவான்
குருபகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

வருடத்திற்கு ஒருமுறை குருபகவான் தனது இடத்தை மாற்றுவார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

குருபகவான் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவான் இரண்டாவது வீட்டிற்கு செல்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவராக நீங்கள் மாறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குரு பகவான் செல்கின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடித் தரும் நிதி ரீதியான பலன்கள் உங்களை தேடி வரும் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதலாம் வீட்டில் குருபகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண யோகம் வரும். நவபஞ்ச யோகம் உருவானதால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை பார்ப்பவர்களால் உங்களுக்கு சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel