தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Got Kubera Yoga By Guru Bhagavan

குரு செய்யாமல் விடமாட்டார்.. அதிர்ஷ்டம் வருகிறது.. குபேர யோகம்.. பண மழையில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 10:58 AM IST

Guru Bhagavan: குரு பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த 2024 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது கட்டாயம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

குரு பகவான்
குரு பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.

குரு பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த 2024 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது கட்டாயம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானால் உங்களுக்கு சிறப்பான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. இதுவரை நிதியில் ஏற்பட்டு வந்த நெருக்கடிகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

குருபகவானால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. பணவரவில் எந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். செலவுகள் அதிகரிக்கும் அது சுப செலவுகளாக இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel