பணத்தால் நிரப்பும் குரு.. அதிர்ஷ்டத்தின் மூழ்கப் போகும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் சிக்கிய ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தால் நிரப்பும் குரு.. அதிர்ஷ்டத்தின் மூழ்கப் போகும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் சிக்கிய ராசிகள்

பணத்தால் நிரப்பும் குரு.. அதிர்ஷ்டத்தின் மூழ்கப் போகும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் சிக்கிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 26, 2024 02:40 PM IST

Lord Guru Bhagavan: ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பணத்தால் நிரப்பும் குரு.. அதிர்ஷ்டத்தின் மூழ்கப் போகும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் சிக்கிய ராசிகள்
பணத்தால் நிரப்பும் குரு.. அதிர்ஷ்டத்தின் மூழ்கப் போகும் ராசிகள்.. விபரீத ராஜயோகத்தில் சிக்கிய ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் ஒன்றான குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது இதுவே மிகப்பெரிய இடமாற்றமாகும். குரு பகவான் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். இவர் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்தார். 

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

குருபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல ஆடம்பரமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வரக்கூடிய காலங்கள் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட பண வரவு அதிகமாக இருக்கும். பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். மற்றவர்களிடத்தில் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பணக்காரராக மாறும் யோகம் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9