தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ரிஷபத்தில் உதயமாகின்றார் குரு.. ஜூன் முதல் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்!

Money Luck: ரிஷபத்தில் உதயமாகின்றார் குரு.. ஜூன் முதல் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2024 01:48 PM IST

Lord Guru Bhagavan: ரிஷப ராசியில் உதயமாகும் குரு பகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவித்த பிரகாசிக்கப் போகின்றனர்.

ரிஷபத்தில் உதயமாகின்றார் குரு.. ஜூன் முதல் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்
ரிஷபத்தில் உதயமாகின்றார் குரு.. ஜூன் முதல் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

தேவர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமனத்தால் பல ராசிகளுக்கு கிடைக்க விருந்த நன்மைகள் அப்படியே தடைபடும். ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் மீண்டும் உதயமாகின்றார்.

ரிஷப ராசியில் உதயமாகும் குரு பகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவித்த பிரகாசிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வெற்றிப் பயணம் தொடங்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய இலக்கு நிறைவடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் உதயமாகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். 

வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel