தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Get Rajayoga By Lord Mars

Lord Mars: அதிரடியாக வருகின்றார் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு கொட்டுது யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 02:43 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் பிப்ரவரி ஆறாம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசியில் நுழைந்தார். தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். செவ்வாய் கிரகத்தின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனால் சில ராசிகள் சுப பலன்களை பெறுகின்றனர்.

இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் சுப பலன்களை பெறப்போகின்றனர். என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இளைஞர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய திட்டங்கள் வெற்றியை பெரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். விரும்பிய இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.