தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Get Lucky Due To Direct Transit Of Guru

Guru 2024: குரு எனும் யோகக்காரர்.. இந்த ராசிகளுக்கு உச்சம் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 11:40 AM IST

குரு நேரான பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் குரு பகவான் புத்தாண்டு முதல் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

குருபகவான் நாட்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இருப்பினும் குரு பகவானின் நேரான பயணத்தால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

 

குருபகவானின் நேரான பயணத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். அலட்சியமாக இருக்க வேண்டாம் . மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பெற்றோரால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் 12வது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் தனது நேரான பயணத்தை தொடங்கி இருக்கும் காரணத்தினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இந்த நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.