தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Get Auspicious Results From The Rising Of Saturn

Sani: சனி உதயமாகப் போகிறார்.. பணவரவில் குளிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 02, 2024 01:31 PM IST

சனிபகவானின் உதயத்தால் சுப பலன்களை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் சனிபகவான் மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாக உள்ளார். சனிபகவானின் உதயம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பற்றி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

சிம்ம ராசி

 

சனிபகவான் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். நீண்ட நாட்களாக தடைபட்ட கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு தேடி வரும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் பணவரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு மங்களமாக அமைந்துள்ளது. பல சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel