தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Are Lucky Due To Ketu Lords Nakshatra Transit

வந்துவிட்டார் கேது.. என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 07, 2024 06:00 AM IST

Ketu Transit: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

கேது பெயர்ச்சி
கேது பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

இந்நிலையில் கேது பகவான் மார்ச் 4-ம் தேதி அன்று அஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். வரும் நவம்பர் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். கேது பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான கடன் சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டுச் செல்லும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பெற்றோர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் திறக்கப்படும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்க உள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த மனக்கசப்புகள் அனைத்தும் தீரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel