தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: இந்த ராசிகளை ஒன்னும் பண்ண முடியாது.. குரு அஸ்தமன ஆட்டம்.. 2024ஆம் ஆண்டின் பணமழை பெறும் ராசிகள்

Guru Peyarchi 2024: இந்த ராசிகளை ஒன்னும் பண்ண முடியாது.. குரு அஸ்தமன ஆட்டம்.. 2024ஆம் ஆண்டின் பணமழை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2024 09:53 AM IST

Guru Peyarchi 2024: குரு பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

குருபகவான்
குருபகவான்

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். அதற்குப் பிறகு குரு பகவான் மே மூன்றாம் தேதி அன்று இரவு நேரத்தில் ரிஷப ராசியிலேயே அஸ்தமனமாக உள்ளார். அவருடைய இடப்பெயர்ச்சி நடந்து முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் அஸ்தமனம் நிகழ்வு நடக்கின்றது. இது மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

குரு பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடக ராசி

 

குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு சிறப்பு முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் மாணவர்களுக்கு சிறந்த காலமாக இது அமையும். போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த கூடும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி

 

குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். நிதி ஆதாயத்தால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel