தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis That Are Fully Blessed By Lord Saturn

Shani Favorite Rasis: சனிபகவானுக்கு மிகவும் நெருக்கமான ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 03, 2024 09:37 AM IST

சனிபகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இவர் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடின உழைப்புக்கு மட்டுமே நல்ல பலன்களை வாரி கொடுப்பார் சனி பகவான்.

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இடமாற்றத்திற்கு ஏற்ப சில பலன்களை சனி பகவான் கொடுத்தாலும் அவருக்கென பிடித்த ராசிகள் சில உள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

மேஷ ராசி

 

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளின் நீங்களும் ஒருவர். அவருடைய அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும். மற்றவர்களை காட்டிலும் உங்களுக்கு அதிகமான உதவிகளை செய்வார். மேலும் அதிகமான கஷ்டங்களை கொடுக்காமல் மற்றவர்களிடமிருந்து உங்களை காப்பாற்றுவார். பிறருக்கு நீங்கள் உதவி செய்தால் சனி பகவானின் அருள் மேலும் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். இல்லாவிட்டாலும் சனி பகவான் உங்களுக்கு அதிகமான பலன்களை செய்வார்.

துலாம் ராசி

 

அனைத்து ராசிகளை விட சனி பகவான் உங்களுக்கு நல்ல உச்சத்தை கொடுப்பார் அதிகப்படியான அருள் மழையை பொழிவார். வாழ்க்கையில் அவ்வப்போது உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக எதையும் ஏற்படுத்தாமல் சனி பகவான் உங்களை காப்பாற்றுவார். மிகப்பெரிய சிக்கல்கள் உங்களைத் தேடி வந்தாலும் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசியாக நீங்கள் இருக்கின்ற காரணத்தினால் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும்.

மகர ராசி

 

சனிபகவானின் சொந்த ராசியாக விளங்கக்கூடிய மகர ராசிக்கு சனி பகவானின் அருள் எப்போதும் உண்டு. அவருடைய அருளாசி உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். தங்கள் இலக்குகளை அடைய விரும்பும் உங்களுக்கு சனி பகவான் கடின உழைப்புக்கான பலன்களை கட்டாயம் கொடுப்பார். எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக அவர் இருப்பார்

கும்ப ராசி

 

சனி பகவானின் ராசியான உங்களுக்கு அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் உண்டு. உங்களுடைய கடின உழைப்புக்கு சிறப்பான பலன்களை எப்போதும் கொடுப்பார். மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் சனிபகவான் உறுதுணையாக இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் அந்த அளவிற்கு ஏற்படாது. நிதி நிலைமையில் உங்களை வலுவாக வைத்திருப்பார். எப்போதும் சனி பகவானின் தாக்கம் உங்களுக்கு குறைவாகவே இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel