தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis In Which Rahu Ketu Gains Yoga

Rahu Ketu: ராகு கேது சம்பவம் உறுதி.. இந்த ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2024 04:57 PM IST

ராகு கேதுவால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு பகவான் மற்றும் கேது பகவான் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள்.

ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் தற்போது பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். ராகு மற்றும் கேது பயணத்தால் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார்கள். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். பண வரவிற்கு இந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பயணங்கள் நல்ல பலன்களை தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். திடீரென எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வேலை மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் புதிய முயற்சிகள் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் நன்மைகள் உண்டாகும்.

மிதுன ராசி

 

ராகு மற்றும் கேது நீங்கள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ராகு கேது சிறப்பான இடத்தில் அமர்ந்துள்ளனர். அதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்த காரியம் உங்களுக்கு ஏற்றவாறு கை கூடி வரும். நன்மைகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel