தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis In Which Lord Saturn Gets Lucky

Lord Saturn: சனி உதயத்தில் கொட்டும் பணமழை.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 04:59 PM IST

சனிபகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள்.

அந்த வகையில் சனிபகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்வார்.

தற்போது இதே கும்ப ராசியில் சனி பகவான் இந்த மார்ச் மாதம் உதயமாகின்றார். சனிபகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சனி பகவான் 11ஆவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான மகிழ்ச்சிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களது ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். மார்ச் மாதம் முழுவதும் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வியாபாரம் விரிவாகும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel