தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis In Which Lord Ketu Gets Rich Yoga

Ketu Transit: கேது புகுந்து விட்டார்.. நட்சத்திரத்தில் அதிரடி.. பணமழை கொட்டுது.. குபேர ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2024 02:16 PM IST

Ketu Transit: கேது பகவான் எந்த கிரகத்தோடு இணைந்தாலும் அவருடைய பலமானது பல மடங்கு அதிகரிக்கும். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது. பல்வேறு விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கேது பெயர்ச்சி
கேது பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கேது பகவான் எந்த கிரகத்தோடு இணைந்தாலும் அவருடைய பலமானது பல மடங்கு அதிகரிக்கும். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது. பல்வேறு விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் நடந்துள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

பொங்கல் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கின்றது. முக்கியமான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தாய் வழி சொந்தங்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் உங்களுக்கு வெற்றியை தருவார்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் அனைத்து விதமான செல்வங்களையும் கேது பகவான் கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கேது பயணம் செய்து வருகின்றார். அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களோடு ஏற்பட்டுள்ள மனக்கசப்பு தீரும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கேது பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். குரு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். அதன் விளைவாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிக செலவுகள் ஏற்படும் சுப செலவுகளாக மாறும் தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். போட்டி தேர்வுகளில் மாணவர்களின் சிறந்து விளங்குவார்கள், கல்வியில் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel