தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rashis That Will Be Blessed By Lord Guru And Ketu

Guru and Ketu: குருவோடு நின்றார் கேது.. உருவானது நவபஞ்ச யோகம்.. பண மழையில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 21, 2024 05:06 PM IST

Guru and Ketu: குருபகவான் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர்களுடைய நிலைகளைப் பொறுத்து நவபஞ்ச யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

குரு மற்றும் கேது
குரு மற்றும் கேது

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்கக் கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீனராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள்.

குருபகவான் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர்களுடைய நிலைகளைப் பொறுத்து நவபஞ்ச யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டு கிரகங்களின் அமைப்பால் இந்த யோகம் உருவாகியுள்ள காரணத்தினால் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மகர ராசி

 

குரு மற்றும் கேதுவால் உங்களுக்கு ராஜயோகம் உருவாகி உள்ளது. அதிர்ஷ்டம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமைத் திறனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ரிஷப ராசி

 

குரு மற்றும் கேது யோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். மிகப்பெரிய துறையில் பயணம் செய்பவர்களோடு உங்களுக்கு நட்புறவு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.

கன்னி ராசி

 

குரு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel