தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The People Of The Zodiac Who Will Be Drenched In The Rain Of Money By Saturn

Sani: சனி உதயத்தால் பணமழை..அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 01:50 PM IST

சனிபகவானால் பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார்.

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவானை அனைவரும் கண்டால் அச்சப்படுவார்கள். ஏனென்றால் நன்மை தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இவருடைய சொந்த ராசியாக கும்ப ராசி திகழ்ந்து வருகின்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் வரும் மார்ச் 18ஆம் தேதி அன்று உதயமாக உள்ளார் சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு மகிழ்ச்சி உண்டாகும். அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

சனி பகவானின் உதயமானது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

சனியின் உதயம் உங்களுக்கு சிறப்பான காலமாக அமைந்துள்ளது. இதுவரை தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

துலாம் ராசி

 

சனி பகவானின் உதயம் உங்களுக்கு சுப பலன்களை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel