Guru Peyarchi: குரு யோகத்தால் ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள்
Guru Bhagavan: குரு பகவான் ராஜயோகத்தை பெற்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

மங்களநாயகனாக விளங்கக்கூடிய ஒரு குரு பகவான் ராஜ குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகிறார்.
குருபகவான் எந்த ராசிக்கும் கெட்ட பலன்களை கொடுப்பது கிடையாது. அவருடைய இடமாற்றத்தை பொறுத்து சில நேரங்களில் அசுப பலன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் குரு பகவான் இடமாற்றத்தால் சுபயோக பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
மேஷ ராசி
இந்த ஆண்டு குருபகவான் செய்யும் நடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது சேமிப்பு அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
கடக ராசி
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் குருபகவானால் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
சிம்ம ராசி
குருபகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகர்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி ராசி
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய சூழ்நிலை உண்டாகும். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் மகனும் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
