தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Lucky Zodiac Signs With Venus Entering Pisces

அதிர்ஷ்டம் கதவை தட்டும்..மீனத்தில் ஆட்டத்தை தொடங்கிய சுக்கிரன்.. பணமழை கொட்டுவது உறுதியானது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 16, 2024 02:59 PM IST

zodiac signs: சுக்கிர பகவான் குரு பகவானின் மீன ராசியில் இந்த மாத இறுதியில் நுழைய உள்ளார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிரன் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் ஒருவராக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் மேஷம் முதல் மேலும் வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் சுக்கிர பகவான் குரு பகவானின் மீன ராசியில் இந்த மாத இறுதியில் நுழைய உள்ளார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

மீனத்தில் சுக்கிர பகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தை மற்றும் வணிகம் உள்ளிட்டவைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கடக ராசி

 

ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை கொடுக்கப் போகின்றது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் அனைத்து வாய்ப்புகளும் உங்களை தேடிவரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு அதிகப்படியான லாபத்தை பெற்று தர போகின்றது. கன்னி ராசிக்கான லாபத்தை சுக்கிரன் கொடுப்பார். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இது சிறந்த காலமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

விருச்சிக ராசி

 

சுக்கிர பகவானின் பெயர்ச்சியானது உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அனைத்து வேலைகளும் உங்களுக்கு ஏற்றவாறு வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தின் அமைதியான சூழல் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வருமானம் அதிகரிக்க கூடும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது லாபகரமான காலமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

WhatsApp channel