தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Lucky Zodiac Signs With Saturn And Venus Combination

Sani Sukra Luck: சனியோடு உச்சம் பெற்ற சுக்கிரன்.. பணமழை கொட்டும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 05:25 PM IST

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை
சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் சனி பகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் நுழைகின்றார். இதனால் சுக்கிரன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்கின்றனர். மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை சுக்கிரன் இதே ராசியில் பயணம் செய்கின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

கும்ப ராசிகள் சனி மற்றும் சுக்கிரன் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பொது துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் நடக்கும்.

துலாம் ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். உங்களுடைய அரசியல் நான்காம் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் சனி மற்றும் சூரியன் ஒன்று சேர்க்கின்றனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்க போகின்றது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel