Guru and Mars: குருவும் செவ்வாயும் சேர்ந்தனர்.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru And Mars: குருவும் செவ்வாயும் சேர்ந்தனர்.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்

Guru and Mars: குருவும் செவ்வாயும் சேர்ந்தனர்.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 10, 2024 10:34 AM IST

குரு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகளை இங்கே காண்போம்.

குரு பகவான், செவ்வாய் பகவான்,
குரு பகவான், செவ்வாய் பகவான்,

இது போன்ற போட்டோக்கள்

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்கள். அப்போது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடிய செவ்வாய் பகவான் இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். அதே சமயம் வரும் ஜூலை 12ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

குரு மற்றும் செவ்வாய் பகவான் இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை மாதம் ஒன்று சேரப் போகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அபரிமிதமான வெற்றிகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் மற்றும் குருபகவான் இருவரும் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இந்த காலகட்டத்தில் செய்யக்கூடிய புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் செயலுக்கு ஏற்ப நல்ல பிரதிபலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து காரியங்களையும் துணிச்சலாக செய்வீர்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் யோகம் பிறந்துள்ளது. குரு மற்றும் செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இவர்களுடைய சேர்க்கை உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9