தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Horoscopes Where Mars And Venus Together Are Going To Give Luck

மகாலட்சுமி யோகம்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. செவ்வாய் சேர்ந்து விட்டார்.. முன்னேற்றம் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 03:59 PM IST

Mars and Venus: கும்ப ராசியில் சனி பகவான் செவ்வாய் பகவான், சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மகாலட்சுமி யோகத்தை பெறுகின்றனர்.

செவ்வாய் பகவான், சுக்கிர பகவான்
செவ்வாய் பகவான், சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். அசுரர்களின் குருவாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சுக்கிரன் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது அவருடைய சொந்த ராசியாகும்.

இந்நிலையில் கும்ப ராசியில் சனி பகவான் செவ்வாய் பகவான், சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மகாலட்சுமி யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ள காரணத்தினால் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel