தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புயலாக பணத்தை கொட்ட போகும் புதன்.. ரிஷபத்தில் கொட்டும் பண மழை.. யோக ராசிகள் நீங்கள் தான்

Lord Mercury: புயலாக பணத்தை கொட்ட போகும் புதன்.. ரிஷபத்தில் கொட்டும் பண மழை.. யோக ராசிகள் நீங்கள் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 11:47 AM IST

Lord Mercury: சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகமாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் அற்புதமான படங்களை சில ராசிகள் பெற போகின்றன.

புயலாக பணத்தை கொட்ட போகும் புதன்.. ரிஷபத்தில் கொட்டும் பண மழை.. யோக ராசிகள் நீங்கள் தான்
புயலாக பணத்தை கொட்ட போகும் புதன்.. ரிஷபத்தில் கொட்டும் பண மழை.. யோக ராசிகள் நீங்கள் தான்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்கள் புத்திசாலித்தனத்தில் சிறந்து விளங்குவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷ ராசியில் தற்போது பயணம் செய்து வரும் புதன் பகவான் வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார்.

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகமாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் அற்புதமான படங்களை சில ராசிகள் பெற போகின்றன. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகிறார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பேச்சாற்றலால் காரியங்கள் முடிவடையும். புதிய காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும்

கும்ப ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய போகின்றார். அதனால் குழந்தை தொடர்பான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணம் உங்களை தேடி வரும். தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel