மாடி மேல மாடி வச்சு வீடு கட்டும் ராசிகள்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. இனி லட்சத்தில் விளையாடுவது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மாடி மேல மாடி வச்சு வீடு கட்டும் ராசிகள்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. இனி லட்சத்தில் விளையாடுவது யார்?

மாடி மேல மாடி வச்சு வீடு கட்டும் ராசிகள்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. இனி லட்சத்தில் விளையாடுவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 18, 2024 04:51 PM IST

Venus Transit: சுக்கிரனின் விசாக நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நட்சத்திரம் குரு பகவானின் நட்சத்திரமாகும். சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

மாடி மேல மாடி வச்சு வீடு கட்டும் ராசிகள்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. இனி லட்சத்தில் விளையாடுவது யார்?
மாடி மேல மாடி வச்சு வீடு கட்டும் ராசிகள்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. இனி லட்சத்தில் விளையாடுவது யார்?

அந்த வகையில் சுக்கிரன் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று விசாக நட்சத்திரத்தில் நுழைந்தார். சுக்கிரனின் விசாக நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நட்சத்திரம் குரு பகவானின் நட்சத்திரமாகும். சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

துலாம் ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க உள்ளது. உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மகர ராசி

சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவை கொடுக்க போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால் உங்களுக்கு சரியான காலமாக இது அமையும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு குறையும்.

கன்னி ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகளை தேடி தரப் போகின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகளில் வந்து சேரும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல ஆதாயங்களை பெற்று தரும். 

பேச்சுத் திறமையால் உங்களுக்கு காரியங்கள் வெற்றியாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner