தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find Out About The Zodiac Signs That Have A Lucky Life Due To Sun Transit

Sun transit: சனியோடு உறவாடும் சூரியன்.. 3 ராஜ ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 08, 2024 11:49 AM IST

சூரிய இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெற்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி சூரிய பகவான் தனது இடத்தை மாற்றினார். அப்போது தை மாதம் பிறந்தது அந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே சனி பகவான் இந்த ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

சனி மற்றும் சூரியனின் சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ஜாதகத்தில் சூரிய பகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை திறன் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளார். உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டை சூரிய பகவான் பார்க்கின்றார். உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

சிம்ம ராசி

 

சூரிய பகவான் உங்கள் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செஞ்சாரம் செய்ய போகின்றார். இவருடைய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.