தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find Out About The Zodiac Sign To Be Careful With Lord Saturn

Sani 2024: சனி எச்சரிக்கை மணி அடித்து விட்டார்..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 04, 2024 10:54 AM IST

Saturn Transit: சனி பகவானிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசி குறித்து இங்கே காண்போம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கும்ப ராசிக்கு இடமாற்றம் அடைந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இடமாற்றம் செய்துள்ளார்.

சனிபகவானில் இந்த பயணம் ஆனது சில ராசிகளுக்கு உடல் நலக் கோளாறு, மனக்குழப்பம், வார்த்தைகள் மூலமாக உள்ளிட்டவர்களை உருவாக்குகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிகள் தங்களது கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும் சிவன் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு பல நன்மைகளை உங்களுக்கு கொடுக்கும்.

கடக ராசிக்காரர்களான உங்களுக்கு இந்த ஆண்டு அஷ்டம சனி நடந்தாலும், விபரீத ராஜயோகம் கிடைக்க உள்ளது. உங்கள் பணம் வரவிலிருந்து குறையும் இருக்காது வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் குறையும். தொழிலில் உள்ள லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அது குறித்து எந்த சிக்கல்களும் இருக்காது.

வருமானத்திற்கு இது சரியான காலமாக இருந்தாலும் தொழிலில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் கூட்டுத் தொழில் செய்யும் போது கூட்டாளிகளோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். சனி பகவானால் ஆசை அதிகமானாலும் சரியான முறையில் செயல்பட்டு ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். பலமுறை சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

கூட்டாளிகளோடு தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போ பொது சில செலவு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சவால்களை எதிர்கொண்டு சாதிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்