தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காதலில் ஏமாற்றும் ராசிகள்.. இந்த 4 ராசிகள் எப்ப வேணும்னாலும் ஏமாற்ற வாய்ப்பு இருக்கு.. நீங்க என்ன ராசி?

காதலில் ஏமாற்றும் ராசிகள்.. இந்த 4 ராசிகள் எப்ப வேணும்னாலும் ஏமாற்ற வாய்ப்பு இருக்கு.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2024 12:46 PM IST

love life: நவ கிரகங்களின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் காதலுக்கு மிகவும் விசுவாசமற்றவர்களாக விளங்கி வருகின்றனர். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

காதல் வாழ்க்கை
காதல் வாழ்க்கை

இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களும் ஒவ்வொரு குணாதிசயத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல பன்னிரண்டு ராசிகளுக்கு கீழ் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள்.

நவகிரகங்களில் ஏதோ ஒரு கிரகத்தில் அதிபதியாக கொண்டு 12 ராசிகளும் இயங்கி வருகிறது. தனக்கென பன்னிரண்டு ராசிக்காரர்களும் தனித்துவமான குணாதிசயத்தை கொண்டு இருந்தாலும் அந்தந்த கிரகங்களின் அடிப்படையில் சிறப்பான குணங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் கிரகங்களின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் காதலுக்கு மிகவும் விசுவாசமற்றவர்களாக விளங்கி வருகின்றனர். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மிதுன ராசி

 

இவர்கள் எப்போதும் இரட்டை சிந்தனை கொண்டவர்கள். இதிலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைந்து விட மாட்டார்கள். சில நேரங்களில் இவர்கள் அமைதியாக இருந்து தங்களது காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். புதன் பகவானால் ஆளப்படும் ராசியாக இவர்கள் விளங்கி வருகின்றனர். எப்போதும் ஆழமான உரையாடல்கள் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதனையே விரும்புவார்கள். இதனால் இவர்கள் வெளிப்போக்கான காதலுக்கு எப்போதும் உட்படுவது கிடையாது.

துலாம் ராசி

 

எப்போதும் அழகு மற்றும் நல்லிணக்கத்தை விரும்பக் கூடியவர்கள். இவர்கள் சுக்கிர பகவானால் ஆளப்படும் ராசிக்காரர்கள். சரியான துணையை எப்போதும் தேடி தெரியக்கூடியவர்கள். தேடலை அதிகம் விரும்பக் கூடியவர்கள். ஒன்றை விட ஒன்று சிறப்பாக இருந்தால் அதை அவர்கள் உணர்ந்தால் அந்த இடத்தை நோக்கி பயணம் செய்வார்கள். அமைதியான இயல்பை கொண்டவர்களாக இருந்தாலும் சில அமைதியற்ற சூழ்நிலை காரணமாக இவர்கள் உறுதியற்ற நிலைமையை ஏற்கின்றார்கள். அதன் காரணமாக காதல் வாழ்க்கையில் இவர்கள் அவ்வளவு எளிதில் ஈடுபடுவது கிடையாது.

கும்ப ராசி

 

மிகவும் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள் ஒரு உறவு அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. அதே சமயம் புதுமை மற்றும் கிளர்ச்சியை அதிகம் விரும்பக் கூடியவர்கள் மற்றவர்களை அவ்வளவு எளிதில் நம்பி விடமாட்டார்கள். தங்கள் சுதந்திரத்தை அதிகம் மதிக்கக் கூடியவர்கள். உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை இவர்கள் எப்போதும் விரும்புவது கிடையாது. தனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்பக் கூடியவர்கள் எனவே காதல் வாழ்க்கையில் இவர்கள் அவ்வளவு எளிதில் ஈடுபடுவது கிடையாது.

விருச்சிக ராசி

 

ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆழமான உணர்ச்சிக்கு இவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டக் கூடியவர்கள். தங்களை எப்போதும் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள். நினைத்த காரியத்தை யாருக்கும் தெரியாமல் சாதித்துக் கொள்ளக் கூடியவர்கள். மற்றவர்களின் உணர்ச்சிக்கு அவ்வளவு எளிதில் மதிப்பு கொடுத்து விட மாட்டார்கள். தங்களுக்கு ஏற்றார் போல் அடுத்தடுத்த உறவுகளை தேடிக் கொண்டே இருப்பார். இவர்களுக்கானவர்களை இவர்கள் அறிந்து கொள்வதில் அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள். அதனால் இவர்களை கவனிப்பது மிகவும் அவசியமாகும். காதல் வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் காலடி எடுத்து வைத்து விடமாட்டார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel