தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரிஷபத்தில் விளையாட்டை தொடங்கும் சுக்கிரன்.. சொந்த ராசி பயணத்தால் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

ரிஷபத்தில் விளையாட்டை தொடங்கும் சுக்கிரன்.. சொந்த ராசி பயணத்தால் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2024 10:02 AM IST

Yoga of Venus: சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபத்தில் விளையாட்டை தொடங்கும் சுக்கிரன்.. சொந்த ராசி பயணத்தால் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்
ரிஷபத்தில் விளையாட்டை தொடங்கும் சுக்கிரன்.. சொந்த ராசி பயணத்தால் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அழகின் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் மே மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியும் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு மிதுன ராசிக்கு செல்கிறார்.

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும் சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வேலைகள் தொடங்க நினைத்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உங்களை தேடி வரும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். வேலை செய்யும் இடத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் வலிமையான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel