தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find Lucky Signs With Lords Sun And Rahu

ராகுவை பறந்து பிடித்தார் சூரியன் பணமழை உறுதி.. ராஜயோகம் வருகிறது.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 05:08 PM IST

Sun and Rahu: நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ராகு பகவான் அதில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது ராகு மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

அசுப கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் ராகு பகவான். ராகு கேது எப்போதும் இணைபிரியா கிரகங்களாக விளங்கி வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ராகு பகவான் அதில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது ராகு மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுப பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

சூரியன் ராகு சேர்க்கை காரணமாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இன்பமான சூழ்நிலை உண்டாகும். புதிய விஷயத்தை திட்டமிட்டால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் எதிரியாக இருப்பவர்கள். கூட உங்களுக்கு நண்பராக மாறுவார்கள் கடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுன ராசி

 

மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ரிஷப ராசி

 

சூரியன் மற்றும் ராகு சேர்ந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த படங்கள் உங்களை தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கௌரவம் உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அனைத்து விதமான யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதிக வெற்றி வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. மாணவர்கள் சில விஷயங்களில் கவனங்கள் செலுத்துவது நல்லது. இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel