தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி பின்னாடியே வருகிறார் யோகத்தில் நுழையும் ராசிகள் பணமழை உங்களுக்காக பாருங்கள் மக்களே

Lord Sani: சனி பின்னாடியே வருகிறார் யோகத்தில் நுழையும் ராசிகள் பணமழை உங்களுக்காக பாருங்கள் மக்களே

Suriyakumar Jayabalan HT Tamil
May 26, 2024 10:24 AM IST

Lord Saturn: சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.

சனி பின்னாடியே வருகிறார் யோகத்தில் நுழையும் ராசிகள் பணமழை உங்களுக்காக பாருங்கள் மக்களே
சனி பின்னாடியே வருகிறார் யோகத்தில் நுழையும் ராசிகள் பணமழை உங்களுக்காக பாருங்கள் மக்களே

சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் பயணம் செய்து வருகிறார் இந்த ஆண்டு முழுவதும் மிக ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. கணவரில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு பிடிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் சனி பகவானின் வக்கிரப் பயிற்சி யோகத்தை கொடுக்கப் போகின்றது. இதனால் நீங்கள் அனைத்து காரியங்களையும் எளிதாக முடித்து விடலாம். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும். 

உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கொடுக்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும்.

கன்னி ராசி

சனி பகவான் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் உயர்த்திக் கொடுக்கப் போகின்றது. உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் அமையும். 

அனைத்து விதமான பணிகளுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். நம்பிக்கை அதிகரிக்கக்கூடும். நிதி ஆதாயத்திற்கான பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். 

பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான மாற்றங்கள் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel