Thai Amavasai 2024: வந்துவிட்டது தை அமாவாசை.. முன்னோர்களின் ஆசிர்வாதத்தை நேரடியாக பெறலாம்
Thai Amavasai 2024: தை அமாவாசை திருநாளில் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.
பித்ருலோகத்திற்கு திரும்பவும் செல்லக்கூடிய நமது முன்னோர்களுக்கு மனதை குளிர வைப்பதற்காகவும், அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காகவும் பாவங்களை நீக்கி கொள்வதற்காகவும், உரிய வழிபாடு நடத்தப்படும் சிறந்த நாளாக தை அமாவாசை திருநாள் விளங்கி வருகிறது.
இந்த திருநாளை புத்தர்களுக்கு வழிபாடு செய்யும் நாளாக போற்றப்பட்டு வருகிறது இந்த தை அமாவாசை திருநாளில் நமது முன்னோர்களுக்கு எவ்வாறு வழிபாடு செய்தால் ஆசிர்வாதத்தை பெற முடியும் என்பது குறித்து இங்கே காணலாம்.
அமாவாசை திருநாள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் உரிய நாளாக திகழ்ந்து வருகின்றது. குறிப்பாக தை மற்றும் ஆடு மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாள் மிகவும் முக்கிய நாட்களாக பார்க்கப்படுகிறது. தர்ப்பணம் செய்து மற்றவர்களுக்கு தானம் கொடுத்து இந்த வழிபாடுகள் பித்ருகளுக்காக செய்யப்படுகிறது.
நமது முன்னோர்களுக்கு செய்யக்கூடிய கடனை சரியாக செய்து வழிபட்டால் அவர்களின் முழு ஆசிர்வாதமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டில் தை அமாவாசை திருநாளானது பிப்ரவரி ஒன்பதாம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை வருகின்றது.
நேரம்
பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலை 7.53 மணிக்கு பிறகு அமாவாசை திதி தொடங்குகிறது பிப்ரவரி 10ஆம் தேதி காலை 4.34 மணி வரை அமாவாசை திதி நாள் இருக்கின்றது. இந்த நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையில் வைத்து வழிபட்டால் நம்முடைய அனைத்து விதமான வேண்டுதல்களையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள் என நம்பப்படுகிறது.
பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலை 7.53 மணிக்கு தை அமாவாசை திருநாள் தொடங்குகின்ற காரணத்தினால் காலை 8 மணி அளவில் குளம் அல்லது ஆறு மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் மாலை நேரத்தில் சந்திரனை வழிபட்டு விளக்கேற்ற வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
பிப்ரவரி ஒன்பதாம் தேதி அன்று காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தால் அவர்களுடைய ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. அன்றைய தினம் 1.5 மணி முதல் 3 மணி வரை படையல் வைக்க சரியான நேரம் ஆகும்.
தானம்
தர்ப்பணம் கொடுக்கும் நாளில் ஏழை மற்றும் வயதானவர்களுக்கு அன்னதானம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறலாம் தை அமாவாசை திருநாளில் நாம் கொடுக்கும் அன்னதானமானது மிகப்பெரிய புண்ணியமாகும். அதேபோல மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற ஜீவராசிகளுக்கும் உணவு கொடுத்தால் அனைத்து விதமான பாவங்களும் போகும் என நம்பப்படுகிறது.
குறிப்பாக மற்றவர்களுக்கு தானம் செய்யும் பொழுது உங்களுடைய வேண்டுதல்களை மனதார வேண்டிக் கொண்டால் அது கட்டாயம் நடக்கும் என கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9