தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Also See The Zodiac Signs That Will Be Afflicted By Lord Mercury

Mercury Bad: புதனால் தலையெழுத்து மாறப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2024 04:58 PM IST

புதன் பகவானால் சிக்கி தவிக்கப் போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக எடுத்துக்கொள்ளும் காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் இருந்து பின்னோக்கிய பயணத்தில் விருச்சிக ராசி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

புதன் பகவானின் வக்கிரப் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இது அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை தரப்போகின்றது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதம் ஆகும். கடன் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பிக்க வாய்ப்புகள் உண்டாகும். தேவையில்லாத இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடக ராசி

 

புதன் பகவானால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் புதன் இருந்து வருகிறார். சில நல்ல காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும். நம்பிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. மிகவும் கவனமாக இருந்து உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுமையாக கடந்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.