Sani 2024: சனி குபேரனாக மாறினார்.. யோக ராசிகள் இவர்கள்தான்
சனிபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளையும் இங்கே காண்போம்.
நவக்கிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். மிக முக்கிய கிரகமாக விளங்கக்கூடிய சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். மற்ற கிரகங்களோடு ஒப்பிடுகையில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது. இவருடைய வேலை நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து பாரபட்சம் இல்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் சனி பகவான் தனது இடத்தை மாற்றினார். 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சனி பகவானின் அருள் ஆசியை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சனிபகவான் உங்களுக்கு அதீத பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரவு இருக்கும். புதிய முதலீடுகள் மிகப்பெரிய லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய காரியங்கள் இலகுவாக நடக்கும்.
ரிஷப ராசி
சனி பகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகின்றார். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகம் என்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சனி பகவான் கருணை மழையை பொழியப் போகின்றார். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்ததை விட பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மகர ராசி
சனிபகவானின் சீரான பயணத்தால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிக செல்வத்தை உங்களுக்கு கொடுப்பார் என கூறப்படுகிறது. உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும். அனைத்து துறைகளிலும் நன்மைகள் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9