தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Also Find The Zodiac Signs That Will Enjoy Good Luck Due To Lord Guru Transiting In Taurus

குரு ரிஷபத்தில் பாய்கிறார்.. பண மழை கொட்டுவது உறுதி.. ஜாக்பாட் வந்துவிட்டது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 21, 2024 05:45 PM IST

Lord Guru: குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குருபகவான் இந்த 2024 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குருபகவான் இந்த 2024 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் இடமாற்றத்தால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து விடுதலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

ரிஷப ராசி

 

குருபகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு திருமண யோகம் வந்துவிட்டது. குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

மிதுன ராசி

 

குரு பகவானின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

கடக ராசி

 

குருபகவானால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. குரு பகவானின் இட பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சண்டைகள் அனைத்தும் நிவர்த்தி அடைந்து நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel