Tamil News  /  Astrology  /  Here We Will Also Find The Zodiac Signs In Which Guru Bhagwan Will Get Lucky

Guru: குரு குறி வைத்து கொட்டப் போகிறார்.. இந்த ராசிகளுக்கு பண மழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2024 10:43 AM IST

Guru Bhagwan: குரு பகவான் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் செல்வநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் வரும் மே மாதம் மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் அதற்குப் பிறகு ரிஷப ராசியில் பயணத்தை தொடங்குகிறார்.

இவருடைய இடமாற்றம் கட்டாயம் பன்னிரு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவானால் எப்போதும் எந்த ராசிக்கும் சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

மேஷ ராசி

குருபகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குழந்தை தொடர்பான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். இது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும்.

ரிஷப ராசி

 

மே மாதத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்த போகின்றது. குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மிதுன ராசி

 

மங்களகரமான வாய்ப்புகளை உங்களுக்கு குரு பகவான் கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும் புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். சிறப்பான செய்தி உங்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.