தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Also Find The Rasis Where Guru Bhagavan Is Going To Experience Yoga

12 ஆண்டு குரு பணமழை.. ரிஷபத்தில் சம்பவம்.. பண மழையில் நனையும் 3 ராசிகள்.. ஜாக்பாட் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 31, 2024 10:23 AM IST

Guru Bhagavan: குரு இடமாற்றத்தால் அந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உள்ளிட்டவைகளை பெறப்போகின்றனர். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். 2025 மே மாதம் வரை இதே ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

குரு இடமாற்றத்தால் அந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உள்ளிட்டவைகளை பெறப்போகின்றனர். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவான் முதல் வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை சேமிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் செல்கின்றார். இதனால் உங்களுடைய கனவுகள் நினைவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்புக்கு பலனாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது.

கும்பராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திடீரென பண வரவு இருக்கும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel